ஜியோ- கூகுள் கூட்டணி: அடுத்து ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவி நிறுவனங்களுக்கு ஆப்பு!!
செவ்வாய், 14 மார்ச் 2017 (12:03 IST)
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்களிடையே சில ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து மலிவு விலை ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவி சேவைகளுக்கான புதிய மென்பொருள்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மலிவு விலை ரிலையன்ஸ் ஜியோ 4ஜி ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்ய கூகுள் பிரான்டிங் பயன்படும். இதோடு ஜியோ செயலிகளை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வழங்கி அதன் செயல்பாட்டை மேம்படுத்த முடியும்.
ரூ.1000 பட்ஜெட்டில் 4ஜி வோல்ட்இ வசதி கொண்ட பீச்சர் போன்களை தயாரிக்க ரிலையன்ஸ் ஜியோ திட்டமிடுவதாக கூறப்பட்டது.
ரிலையன்ஸ் ஜியோ பீச்சர் போன்களில் அன்லிமிட்டெட் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
குறைந்த விலையில் தயாராகும் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.