மீண்டும் விலை குறைந்தது ரியல்மி ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (19:19 IST)
ஒப்போ ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனத்தின் துணை பிராண்டான ரியல்மி நிறுவனம் மீண்டும் தனது ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் மாடல் மீது விலை குறைத்துள்ளது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமான ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் 3 ஜிபி ராம், 4 ஜிபி ராம் என இரண்டு வெர்ஷனில் வெளியானது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட போது 3 ஜிபி ராம் ரூ.11,999 என்றும், 4 ஜிபி ராம் ரூ.14,499 என்றும் விலை என நிர்ணயம் செய்யப்பட்டது. 
 
ஆனால், இப்போது ரியல்மி யு1 3 ஜிபி ராம் ரூ.9,999 என்றும், 4 ஜிபி ராம் என்றும் ரூ.11,999 விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
ரியல்மி யு1 சிறப்பம்சங்கள்:
# 6.3 இன்ச் 2350x1080 பிக்சல் 19.5:9 ஃபுல் ஹெச்.டி. + ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர்
# 900MHz ARM மாலி-G72 MP3 GPU, ஆன்ட்ராய்டு 8.1 சார்ந்த கலர் ஓ.எஸ். 5.2
# 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி; 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி 
# 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
# 2 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4
# 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, ஏ.ஐ., சோனி IMX576 சென்சார்
# டூயல் சிம் ஸ்லாட், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
# 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி திறன்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்