பினாமி சொத்து தடுப்பு மசோதா: அடி வாங்கும் ரியல் எஸ்டேட் தொழில்!!

வியாழன், 29 டிசம்பர் 2016 (10:20 IST)
பினாமி சொத்துகளை முடக்குவது தொடர்பாக பிரதமர் எடுக்க உள்ள நடவடிக்கையால் ரியல் எஸ்டேட் துறை தூய்மைப்படும் என்று தெரியவருகிறது.


 
 
புதிதாக கொண்டு வரப்பட உள்ள சட்டத்தை உரிய வகையில் அமல்படுத்தினால் ரியல் எஸ்டேட் விலை குறையும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
 
மற்றொருவர் பெயரில் சொத்துகளை வாங்குவது ரியல் எஸ்டேட் துறையில் அதிகமாக உள்ளது. அத்துடன் கணக்கில் காட்டப்படாத கறுப்புப் பணம் அதிகம் முடக்கப்படுவதும் இத்துறையில்தான். வரி ஏய்ப்பு செய்வதற்கும் இது வழி வகை செய்து வருகிறது.
 
ரியல் எஸ்டேட் துறையில் மட்டும் பினாமி பெயரிலான சொத்துகளின் மதிப்பு 100 கோடி டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 
 
புதிதாகக் கொண்டு வரப்பட உள்ள சட்டம் ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரும். இதனால் ஊழல் குறையும், விலையும் கட்டுக்குள் வரும் என்று எதிப்பார்க்கப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்