பெட்ரோல், டீசல் விலை. லிட்டருக்கு ரூ2.50 குறைகிறது

வியாழன், 30 அக்டோபர் 2014 (15:17 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலை, லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் குறைய வாய்ப்புள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை குறைந்ததை அடுத்து, இந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 
பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ2 குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
 
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றிற்கு 85 டாலரில் இருந்து 83 டாலராகக் குறைந்துள்ளது. டீசலின் விலை மட்டும் சர்வதேசச் சந்தையில் 11 சதவீதம் குறைந்துள்ளது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது.
 
2014 ஆகஸ்டு மாதம் முதல் இது வரை 5 முறை பெட்ரோலிய பொருட்களின் விலை குறைந்துள்ளது குறிப்பிடதக்கது. டீசல் விலையைக் குறைப்பது இதுவே முதல் தடவை ஆகும்.
 
விலைக் குறைப்பு குறித்த அறிவிப்பு, ஓரிரு தினங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்