கேஷ் ஆன் டெலிவரியில் 'ரயில் டிக்கெட்!

செவ்வாய், 3 பிப்ரவரி 2015 (18:57 IST)
ஆன்லைன் வர்த்தகத்தில் பொருட்களை கேஷ் ஆன் டெலிவரியில் வாங்கி பார்த்திருப்போம். ஆனால் இப்பொழுது ரயில் பயணச்சீட்டையும் பெறலாம் என்று இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயணச்சீட்டை ஐந்து தினங்களுக்கு முன்னால் பதிவு செய்ய வேண்டும். பின்னர் பயணச்சீட்டை கையில் பெரும் பொழுது பணத்தை கொடுத்தல் போதும். இத்திட்டத்தை சோதனை அடிபடையில் இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த சேவையின் கீழ் பயணச்சீட்டை பதிவு செய்ய சாதாரண வகுப்பு படுக்கை வசதி கொண்ட பயனச்சீட்டிர்க்கு ரூ.40 -ம், குளிர் சாதன பெட்டிகளில் பயணம் செய்ய ரூ.60 -ம் கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டும்.

இந்த கேஷ் ஆன் டெலிவரி சேவையை www.bookmytrain.com என்ற இணையதளம் முலம் பயன்படுத்தி கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்