ஸ்மார்ட்போன், டிவி, பவர் பேங்க், இயர்போன்... அசத்தல் சலுகையுடன் எம்.ஐ டேஸ்!

புதன், 19 ஜூன் 2019 (15:58 IST)
சியோமி நிறுவனம் எம்.ஐ டேஸ் என 5 நாட்களுக்கு சலுகை விலையில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. 
 
கடந்த 17 ஆம் தேதி துவங்கிய இந்த விற்பனை 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விற்பனையில் ரெட்மி ஸ்மார்ட்போன்கள், டிவி மற்றும் சியோமியின் மற்ற கேட்ஜெட்ஸ் குறைந்த விலையில் கிடைக்கிறது. 
 
எம்.ஐ டேஸ் சலுகை விற்பனையில் அதிகபட்சமாக ரூ.6,500 வரையில் தள்ளுபடியும், ரூ.4,000 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் வழங்கப்படுகிறது. mi.com மற்றும் amazon.in மூலம் இந்த சலுகையை பெற முடியும். 
1. ரெட்மி 7, ரெட்மி Y3, ரெட்மி 6A ஸ்மார்ட்போன்கள் ரூ.1,500 வரையில் விலை குறைக்கப்பட்டுள்ளது.
 
2. ரெட்மி 6A ஸ்மார்ட்போனின் இரண்டு வேரியண்டுகள் மீது ரூ.1000 மற்றும் ரூ.1,500 ஆஃபர் வழங்கப்படுகிறது. 
 
3. பவர்பேங்க், இயர் போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட கேட்ஜெட்ஸ்க்கும் ஆஃபர் வழங்கப்படுகிறது. 
 
4. எம்.ஐ ப்ளூடூத் இயர்போனிற்கு ரூ.1,499 விற்கப்படுகிறது; ரூ.4,000 வரையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் வழங்கப்படுகிறது. 
 
5. ஆக்ஸிங் வங்கியின் கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் பொருட்கள் வாங்கினால் 5% கூடுதல் தள்ளுபடி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்