இந்த ஆய்வின் முடிவில் 157 புள்ளிகளுடன் ஜெர்மனி நாட்டின் பாஸ்போர்ட் முதலிடம் பிடித்தது. 156 புள்ளிகளுடன் சிங்கப்பூர் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் இரண்டாம் இடத்தை பிடித்தன. ஆசிய கண்டத்தை பொறுத்த வரை சிங்கப்பூர் முதலிடமும், தென் கொரியா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் 46 புள்ளிகளை பெற்றுள்ள இந்தியாவுக்கு 78-வது இடம் கிடைத்துள்ளது. மேலும், சீனா 58-வது இடத்தையும், இலங்கை 89-வது இடத்தையும், பாகிஸ்தான் 94-வது இடத்தையும் பிடித்துள்ளன.