ஜியோ கடந்த ஆண்டு டெலிகாம் அடி எடுத்து வைத்தபோது இலவச டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்கள் வழங்கி அனவைரையும் கவர்ந்தது. இதைத்தொடர்ந்து ஸ்மார்ட்போன்களையும் மலிவான விலையில் விற்பனை செய்து வந்தது. இந்நிலையில் தற்போது ஜியோபோன் என்று அழைக்கப்படும் புதிய மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது. இதனை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் இந்த இலவச ஜியோபோன் பெற முதலில் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு ஆகஸ்டு 24ஆம் தேதி தொடங்குகிறது. மொபைல் போன் செப்டம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த மொபைல் போன் இலவசமாக வழங்கப்பட்டாலும் ரூ.1500 இருப்பு தொகை செலுத்த வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்த தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.