4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.150 வசூலிக்கப்படும்: வங்கிகள் அதிரடி

வியாழன், 2 மார்ச் 2017 (13:43 IST)
4 முறைக்கு மேல் பணம் வங்கிகளில் பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல் போன்றவைக்கு ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும் என ஹெச்.டி.எப்.சி, ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் தெரிவித்துள்ளன.


 

 
இந்தியாவின் முன்னணி வங்கிகளான ஐசிஐசிஐ ஹெச்.டி.எப்.சி வங்களிகள் பரிவர்த்தனையில் புதிய கட்டுபாடுகளை அறிவித்துள்ளது. வங்கிகளில் 4 முறைக்கு மேல் பணம் செலுத்தினாலோ, எடுத்தாலோ ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
 
இந்த விதிமுறை ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு பொருந்துமா என்பது குறித்து தெரியவில்லை. மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது வீட்டு கிளைகளில் பணம் எடுப்பதற்கோ, செலுத்துவதற்கோ கட்டணம் வசூலிக்கப்படாது.
 
மற்ற கிளைகளில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தாலோ, செலுத்தினாலோ கட்டணம் வசூலிக்கப்படும். இரண்டு வங்கிகளும் வீட்டு கிளை குறித்து வெவ்வேறு விதிகள் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இந்த விதிமுறை சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆக்சிஸ் வங்கியும் இந்த விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்