ரூ.17,000 கோடி அபராதம்: அதிர்ச்சியில் கூகுள்!!

புதன், 28 ஜூன் 2017 (14:37 IST)
கூகுள் நிறுவனம் நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி ஐரோப்பிய யூனியன் ரூ.17 ஆயிரம் கோடி அபராதமாக விதித்துள்ளது. 


 
 
கூகுள் நிறுவனத்தின் தேடு பொறியில் கூகுளின் சொந்த ஆன்லைன் சேவை, கூகுள் ஷாப்பிங் போன்றவற்றிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிரது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
கூகுள் இதர நிறுவனங்கள் சந்தையில் போட்டியிட சம வாய்ப்பு வழங்கவில்லை. மேலும் மற்ற நிறுவனங்களின் சிறப்புகளை  முன்னிலைப் படுத்தப்படாமல் உள்ளது.
 
எனவே, நம்பிக்கைக்கு மாறான வகையில் கூகுள் செயல்படுவதாக ரூ.17,220 கோடி அபராதத்தை ஐரோப்பிய யூனியன் விதித்துள்ளது. 
 
இதே போல் ஒரு முறை இன்டெல் நிறுவனத்திற்கும் ரூ.750 கோடி அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்