ஃபோர்டு நிறுவனத்தில் கைகளைப் போன்ற வடிவமைக்கப்பட்ட ரோபோக்கள் பணிக்கமர்த்தப்பட்டு உள்ளன. தொழிலாளர்கள் சிரமப்பட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகளை எளிதாக செய்து விடுமாம் இந்த ரோபோக்கள். சென்சார் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டிருக்கும் இந்த ரோபோக்கள் அதன் பணியின் குறுக்கே ஏதேனும் தொழிலாளர்கள் கைகளைக் குறுக்கிட்டால், உடனடியாக தனது செயல்பாட்டை நிறுத்திவிடும். இதனால், தேவையற்ற விபத்துகள் நேரமால் தவிர்க்க முடியும் என்கிறது ஃபோர்டு நிறுவனம்.
வேலை நேரத்தைத் தவிர, தொழிலாளர்களுடன் கை குலுக்குவது, காபி அருந்தும்போது சீயர்ஸ் சொல்வது, தட்டிக் கொடுப்பது என கம்பெனி பாஸ் ரேஞ்சுக்கு எல்லா செயல்களையும் செய்யுமாம் இந்த ரோபோக்கள்.