ரூ.25000 வரை தள்ளுபடி இருந்தாலும் விற்க முடியவில்லை; கதறும் நிறுவனங்கள்

புதன், 12 ஏப்ரல் 2017 (16:37 IST)
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பிஎஸ்3 ரக வாகனங்களுக்கு விற்பனை மற்றும் பதிவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து ஆட்டோமொபைல் விற்பனை நிறுவனங்கள் அதிரடியாக சலுகைகளை வழங்கியது. இருந்தும் 1,40,000 வாகனங்கள் தேக்கம் அடைந்துள்ளது.


 

 
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பிஎஸ்3 ரக வாகனங்கள் விற்பனை மற்றும் பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து வாகனங்கள் விற்று தீர்க்க ஆட்டோமொபைல் விற்பனை நிறுவனங்கள் முடிவு செய்து அதிரடி சலுகைகளை வழங்கியது.
 
ரூ.5000 முதல் 25000 வரை சலுகைகளை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் தற்போது 1,40,000 வாகனங்கள் விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளது. இந்த வானகங்களை என்ன செய்வது தெரியாமல் ஆட்டோமொபைல் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் விழி பிதுங்கி உள்ளனர்.
 
தற்போது நஷ்டத்தை சமாளிக்க ஒரே வழி தேக்கம் அடைந்த வாகனங்களை ஏற்றுமதி செய்வது தான். இல்லையென்றால் பிஎஸ்3 ரக வாகனங்களைத் பிஎஸ்4 தரத்திற்கு மாற்ற வேண்டும். இது ஒரு புது வாகனம் தயாரிப்பின் பாதி விலைக்கு சமமாகும். இதனால் பெரும் நஷ்டம் தான் ஏற்படும்.
 
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மாற்று வழி ஏதேனும் உண்டா என ஆராய்ந்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்