ஒரு முறை சார்ஜ் போட்ட போதும், 50 நாளுக்கு தாங்கும்: ஸ்பெஷல் ஸ்மார்ட்போன்

புதன், 27 பிப்ரவரி 2019 (21:01 IST)
ஸ்மார்ட்போன் வாங்கும் அனைவரும் பொதுவாக பார்க்கும் ஒன்று கேமராவும், பேட்டரி திறனும். சார்ஜ் பிரச்சனையை தீர்க்க இப்போது பவர் பேங்கை கையோடு எடுத்து செல்லும் ஆட்களும் உள்ளனர். இவர்களுக்காவே ஸ்பெஷல் ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. 
 
ஆம், ஒரு முறை சார்ஜ் செய்தால், ஒன்றரை மாதத்துக்கு (50 நாட்களுக்கு) சார்ஜே இறங்காத ஸ்மார்டபோனை ஆவெனிர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 
 
இந்த நிறுவனம் பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீசை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் Energizer Power Max P18K Pop என்ற ஸ்மார்ட்போனை தயாரித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 18,000mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது. கருப்பு, ஊதா ஆகிய இரு நிறங்களில் கிடைக்கிறது.
Energizer Power Max P18K Pop சிறப்பம்சங்கள்: 
# குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசசர், 6.2 இன்ச், ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே
# ஆண்ட்ராய்டு ஓரியோ பை 9.0, 
# டூயல் சிம் கார்டுகள், கைரேகை சென்சார் 
# 6 ஜிபி ராம், 128 ஜிபி இன்பீல்ட் மெமரி
# 16 மெகா பிக்சல் முன்புற கேமரா
# 12+5+2 மெகா பிக்சல் பின்புற கேமரா

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்