கட்டாயமாகும் இ-இன்சூரன்ஸ் கணக்கு: எப்படி செயல்படுத்துவது?

வியாழன், 29 செப்டம்பர் 2016 (11:09 IST)
அக்டோபர் 1-க்கு பிறகு புதிதாக இன்சூரன்ஸ் பாலிஸி வாங்க விரும்பும் அனைவருக்கும், இ-இன்சூரன்ஸ் கணக்கு இருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

 
காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் இந்திய மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏ) அன்மையில் கட்டாயமாக இ-இன்சூரன்ஸ் கணக்கு வைத்து இருக்க வேண்டும் என்பதை அறிவித்துள்ளது.
 
கணக்கு துவங்க வழிமுறைகள்:
 
அரசு பட்டியலிட்டுள்ள இன்சூரன்ஸ் நிலையத்துடன் இணைப்பில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு இன்சூரன்ஸ் ரெபாசிட்டரி தேர்வு செய்யலாம்.
 
இணைதளத்தில் இருந்து இன்சூரன்ஸ் ரெபாசிட்டரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, ஆவணங்கள் மற்றும் விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவேற்றவும் அல்லது இன்சூரன்ஸ் ரெபாசிட்டரி கிளையில் சமர்ப்பிக்கவும்.
 
இன்சூரன்ஸ் நிறுவனம், இ-இன்சூரன்ஸ் விண்ணப்பத்தைச் சரிபார்த்து செயல்படுத்தும். அல்லது இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பித்து இருந்தாலும் அதை நிறுவனம் இன்சூரன்ஸ் ரெபாசிட்டரியில் சமர்ப்பித்துவிடும்.
 
இன்சூரன்ஸ் ரெபாசிட்டரி கணக்கைத் திறந்து பின்னர் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைப்பர். அதைப் பயன்படுத்தி ரெபாசிட்டரி இணையதளத்தில் நுழைந்து பாலிஸி விவரங்களைப் பார்த்துக்கொள்ளலாம்.
 
பாலிஸிகளையும் எளிதாக இ-இன்சூரன்ஸ் கணக்கில் முறையான விண்ணப்பத்தை இன்சூரன்ஸ் ரெப்பசிட்டரியிடம் சமர்ப்பித்து எளிதாக இணைத்துக்கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்