ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு டிசம்பர் சர்ப்ரைஸ்!!

சனி, 26 நவம்பர் 2016 (09:59 IST)
ரிலையன்ஸ் ஜியோ அதன் முன்னோட்ட ஆஃபரை நிறுத்தி வரம்பற்ற 4ஜி தரவு மற்றும் குரல் அழைப்புகள் ஆகியவற்றை டிசம்பர் 31-ஆம் தேதியோடு முடிவுக்கு கொண்டுவரும் என்று கூறப்படுகிறது. 


 
 
இந்த சலுகை இரண்டாம் பாகமாக நீட்டிக்கப்படும் மேலும் இண்டர்நெட் வேகம், கால் ட்ராப் சிக்கல்கள் என அனைத்திற்குமே டிசம்பர் மாத இடையில் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ரிலையன்ஸ் ஜியோ அதன் பிணைய மேம்படுத்தல் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது, மற்றும் வெல்கம் ஆஃபர் டிசம்பர் 31-ஆம் தேதியோடு முடிவடைகிறது. 
 
ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் முந்தைய ஜியோ வேகத்தோடு ஒப்பிடும் போது இப்போதைய வேகம் நன்றாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 
ஜியோ மீது மோசமான வாடிக்கையாளர் சேவை என்ற புகார்கள் அதிக அளவில் ஏற்பட்டன. எனினும், ரிலையன்ஸ் ஜியோ பயனர் பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு நல்ல நெட்வொர்க் வழங்க அதன் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்