ஜல்லிக்கட்டு போராட்டம்: சம்பாதிக்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள்!!

வெள்ளி, 20 ஜனவரி 2017 (10:55 IST)
சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக, தொலைதொடர்பு நிறுவனங்களின் டேட்டா சேவை பன்மடங்கு வருவாய் ஈட்டியுள்ளது.


 
 
இதில் பெரும் வருவாய் ஈட்டியது பிஎஸ்என்எல் நிறுவனம். மெரீனா கடற்கரை பகுதியில் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களைவிட, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குச் சொந்தமாக, 11 செல்ஃபோன் சேவைக் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. 
 
இதன்படி, கடந்த 4 நாட்களாக, மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களைவிட, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவையை ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள், அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
 
குறிப்பாக, பிஎஸ்என்எல் டேட்டா சேவை வர்த்தகம் 45% அதிகரித்துள்ளது. வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், டுவிட்டர் வழியாக அதிகளவில் தகவல்கள் பகிரப்படுவதால், பிஎஸ்என்எல் டேட்டாவுக்கு அதிக வரவேற்பு உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்