நோக்கியா 9 ஸ்மார்ட்போன்: கான்செப்ட் வீடியோ வெளியீடு!!
செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (14:00 IST)
நோக்கியா நிறுவனம் முன்போன்று மொபைல் தயாரிப்பில் முழுமையாக ஈடுபட்டுள்ளது. நோக்கியா தனத அடுத்தடுத்த ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டு வருகிறது.
கடந்த மாதம் நோக்கியா 8 மாடல் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்ட நிலையில், நோக்கியா 9 குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, நோக்கியா 9 கான்செப்ட் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
நோக்கியா 9 ஸ்மார்ட்போன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று தெரிகிறது. கான்செப்ட் வீடியோவில் நோக்கியா 9 மெட்டாலிக் வடிவைப்பு, மெல்லிய பெசல் மற்றும் துல்லியமாக உள்ளது.
நோக்கியா 8 மாடலுடன் ஒப்பிடும் போது நோக்கியா 9 மாடல் மேலும் பல சிறப்பு அம்சங்களை பெற்றிருக்கும் என தெரிகிறது.