நடைய கட்டும் ஊழியர்கள்: டார்கெட்டை நெருங்கிய துள்ளளில் BSNL !!

வியாழன், 21 நவம்பர் 2019 (14:56 IST)
பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சுமார் 77,000 ஊழியர்கள் இதற்கு விண்னப்பித்துள்ளதாக தெரிகிறது. 
 
1½ லட்சம் பேர் பணியாற்றி வருகிற பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. எனவே இந்த நஷ்டத்தில் இருந்து மீள தனது ஊழியர்களுக்கு பண பயன்களுடன் விருப்ப ஓய்வு திட்டத்தை அறிமுகம் செய்தது.   
 
பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கான பண பயன்கள்:
1. பணி நிறைவு செய்த ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா 35 நாட்கள் ஊதியம் கருணைத்தொகையாக வழங்கப்படும்.
2. பணி ஓய்வு காலம் வரையிலான எஞ்சிய காலத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 25 நாள் ஊதியம் அளிக்கப்படும். 
 
இந்த பண பயனுள்ள ஓய்வு திட்டத்தை 80,000 ஊழியர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள் என பிஎஸ்என்எல் நிறுவனம் எதிர்பார்த்த நிலையில் தற்போது வரை 77,000 ஊழியர்கள் விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்துள்ளனராம். 
 
இதேபோல எம்.டி.என்.எல் நிறுவனத்தில் இருந்தும் 13,532 ஊழியர்கள்  விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்துள்ளனராம். விருப்ப ஓய்வை தேர்தெடுக்க டிசம்பர் 3 ஆம் தேதி கடசி நாள் என்பதால் அதற்கும் மேலும் ஊழியர்கள் இதற்கு விண்ணப்பிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறதாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்