ங்கொப்பன் மவனே... நஷ்டம் நஷ்டம்னு கதறிட்டு லாபம் பார்த்த ஏர்டெல்!

செவ்வாய், 10 டிசம்பர் 2019 (13:53 IST)
டிராய் வெளியிட்டுள்ள காலாண்டு வருவாய் விவரங்களில் ஏர்டெல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட அதிக லாபத்தை ஈட்டியுள்ளது. 
 
தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இந்திய நெட்வொர்க் நிறுவனங்களின் காலாண்டு வருவாய் (ஜூலை முதல் செப்டம்பர்) விவரங்களை வெளியிட்டது. இந்த விவரத்தின் அடிப்படையில் ஏர்டெல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட அதிக லாபத்தை ஈட்டியுள்ளது தெரியவந்துள்ளது. 
 
1. ஏர்டெல் நிறுவனம் ரூ. 19,061 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. 
2. வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 15,988.49 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது.
3.  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 15,945.62 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது.
4. அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் ரூ.3,222.91 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. 
 
ஆனால், சமீபத்தில் ஏர்டெல் நிறுவனமோ நஷ்டத்தின் காரணமாக 14 - 40 சதவீதம் கட்டணங்களை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. அதோடு தற்போது வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து ரூ.4,900 கோடி முதலீட்டை பெற  மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது கூடுதல் தகவல். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்