ஒரு பங்கு இவ்வளவா? ப்ளிப்கார்ட்டை விலை பேசும் அமேசான்!

சனி, 14 ஏப்ரல் 2018 (10:56 IST)
ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், ப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற நிறுவனங்களும் ஆன்லைன் வர்த்தகத்தில் தனி முத்திரை படைத்துள்ளது. 
 
ஆனால், ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசானுக்கு போட்டியாக இருப்பது வால்மார்ட் நிறுவனம். அமேசானை பின்னுக்கு தள்ள இந்நிறுவனம் ப்ளிப்கார்ட்டின் பங்குகளை வாங்கலாம் என திட்டமிட்டது. 
 
ஆனால், வால்மார்ட் நிறுவனத்துக்கு எதிராக ப்[ளிப்கார்ட்டின் ஒரு பங்கை 2 பில்லியன் டாலருக்கு வாங்க அமேசான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
இதனால், வால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கி, வர்த்தக்ததில் முதல் இடத்தைப் பிடிக்க எண்ணிய கனவு கனவாகவே போய்யுள்ளது. 
 
ஆனால், இந்த விவகாரம் குறித்து ப்ளிப்கார்ட் எந்த ஒரு செய்தியையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்