டெல்லியைச் சேர்ந்தவர், கமல் தீப் (30). இவர், ஃப்ளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். போனை டெலிவரி செய்யும் பையன், கமல் தீப் வீட்டின் சரியான முகவரி தெரியாத நிலையில், 2 நாட்கள் தாமதித்து போனை கமலிடம் கொண்டு சேர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கமல் தீப், டெலிவரி செய்ய வந்த பையனை கத்தியால் 20 முறைக்கு மேல் குத்தியுள்ளார்.