அதிரடி ஆஃபர்களை அள்ளித்தரும் அமேசான்: விழாக்கால சிறப்பு விற்பனை

புதன், 18 செப்டம்பர் 2019 (16:00 IST)
ஆன்லைன் விற்பனையில் கொடிக்கட்டி பறக்கும் அமேசான் நிறுவனம் தனது பண்டிகை கால விற்பனையை செப்டம்பர் மாத இறுதியில் தொடங்க இருக்கிறது.

அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் விமரிசையாக கொண்டாட இருப்பதால் அதற்கான விற்பனையை இந்த மாதம் செப்டம்பர் 29ல் தொடங்குகிறது அமேசான் நிறுவனம். வழக்கமான சலுகைகளை விட இதில் அதிகாமன சலுகைகள் கிடைக்கும் என்பதால் மக்கள் ஆர்வமுடன் இந்த சலுகை நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்த விழாக்கல விற்பனையில் உயர்தர துணி வகைகளுக்கு 30 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. மொபைல் போன்களில் முந்தைய மாடல் மொபைல்களுக்கு பாதிக்கு பாதி விலையில் சலுகை கிடைக்கும். மேலும் தற்போது ஐபோன்களீன் விலையை ஆப்பிள் நிறுவனமே குறைத்துள்ளதால் அமேசானில் அதை விடவும் குறைவான விலைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பண்டிகையை முன்னிட்டு புதிதாக வெளியாகும் மொபைல், டிவி மாடல்களுக்கு 25 சதவீதம் வரை சலுகையும், கேஷ் பேக் ஆஃபரும் கிடைக்கும். தவணை முறையில் வாங்குபவர்களுக்கு வழக்கமான வட்டி விகிதத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும். மேலும் மளிகை பொருட்கள், அழகு சாதன பொருட்களுக்கு ஃப்ளாஷ் டீல் எனப்படும் சரக்கு கையிறுப்பு முறையில் பொருட்கள் விற்கப்படும்.

இந்த முறை முதன்முறையாக அமேசானில் பொருட்கள் வாங்குபவர்களை ஊக்குவிக்கும் விதமாக 1000 ரூபாய் வரை கேஷ்பேக் வழங்கவும் வாய்ப்புகள் உள்ளது. இதுதவிர டெபிட் கார்ட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் விலையில் தள்ளுபடி வழங்கப்படும். மேலும் அமேசான் பே மூலம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு எக்ஸ்ட்ரா கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

அமேசானின் இந்த பிக் ஃபெஸ்டிவல் சேல் செப்டம்பர் 29ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 4ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு முடியும் என கூறப்பட்டுள்ளது. 6 நாட்கள் நடைபெறும் இந்த தள்ளுபடி விற்பனையில் லட்சகணக்கான பெரிய நிறுவனங்கள் தங்கள் பொருட்களை தள்ளுபடியில் விற்க காத்துள்ளன. அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள் மட்டும் 12 மணி நேரங்களுக்கு முன்பாகவே, அதாவது செப்டம்பர் 28ம் தேதி மதியம் 12 மணிக்கே தள்ளுபடியில் பொருட்களை வாங்கிட முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்