அனல்பறக்கும் ஆஃபர்கள்: நள்ளிரவில் மோதிக்கொள்ளும் பிளிப்கார்ட், அமேசான்!

சனி, 28 செப்டம்பர் 2019 (18:17 IST)
விழாக்காலத்தை முன்னிட்டு மிகப்பெரும் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஒரே நாளில் தங்களது சலுகை விலை விற்பனையை தொடங்குகின்றன.

இந்தியாவில் ஆன்லைன் விற்பனையில் கொடிக்கட்டி பறக்கும் நிறுவனங்கள் அமேசான் மற்றும் பிளிப்கார்ட். அவ்வபோது விழாக்காலங்களில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக சிறப்பு விழாக்கால விற்பனைகளை இரண்டு நிறுவனங்களுமே நடத்துகின்றன. அவ்வகையில் அமேசானின் ‘கிரேட் இண்டியன் பெஸ்டிவல்’ மற்றும் பிளிப்கார்ட்டின் ‘பிக் பில்லியன் சேல்’ ஆகியவை மக்களிடையே பரவலான வரவேற்பை பெற்றவை.

அமேசான் தனது சிறப்பு விற்பனையை இன்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்க இருக்கும் நிலையில் ஏற்கனவே ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கான விற்பனை தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மொபைல் போன்கள் போன்ற விலை உயர்ந்த பொருட்களுக்கு 40 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடி, வட்டியில்லா தவணை முறையில் பணம் செலுத்தும் வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.

இதுமட்டுமல்லாமல் ஷூ, வாட்ச், கண்ணாடிகள், கைப்பைகள் போன்றவற்றிற்கு 80 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனமும் தனது விழாக்கால விற்பனையை இன்று இரவு தொடங்குவதாக அறிவித்துள்ளது. எனவே இரு நிறுவனங்களும் பல பொருட்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு சலுகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அக்டோபர் 4 வரை நடக்கும் இந்த விற்பனை மூலம் இரண்டு நிறுவனங்களும் சுமார் 10 கோடி வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பார்கள் என்று கணிக்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்