ஏர்டெல் வலைத்தளத்தில் எளிய மாத தவனையுடன் நோக்கியா ஸ்மார்ட்போன் விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 8 சிரோக்கோ, நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன்களுக்கு இந்த சலுகை பொருந்தும்.
இது மட்டுமின்றி ஏர்டெல்லும் ஸ்மார்ட்போன் மீது சலுகைகளை வழங்கியுள்ளது. 30 ஜிபி டேட்டா மற்றும் ரோல் ஓவர் வசதி, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், இலவச ஏர்டெல் டிவி சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
நோக்கியா 6.1 (4 ஜிபி ரேம்) ஸ்மார்ட்போன் வாங்க ரூ.5,799 முன்பணமாக செலுத்தி, 12 மாதங்களுக்கு ரூ.1,499 செலுத்த வேண்டும்.
நோக்கியா 7 பிளஸ் வாங்குவோர் ரூ.5,599 முன்பணமாக செலுத்தி, 12 மாதங்களுக்கு ரூ.2,099 செலுத்த வேண்டும்.
நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போன் வாங்க ரூ.8,599 முன்பணம் செலுத்தி, 18 மாதங்களுக்கு ரூ.2,799 செலுத்த வேண்டும்.