ஏர்டெல் நிறுவனமும் ரூ.499 விலையில் போஸ்ட்பெயிட் சலுகை வழங்கி வருகிறது. மாதம் 40 ஜிபி டேட்டா, அனிலிமிட்டெட் வாய்ஸ் கால், ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் ரூ.499 போஸ்ட்பெயிட் சலுகையில் டேட்டா ரோல் ஓவர் வசதி வழங்கப்படவில்லை. பிஎஸ்என்எல் தற்சமயம் அறிவித்துள்ள ரூ.499 சலுகையில் ஜியொவை விட குறைவாக அதே சமயம் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் வழங்குவதை விட அதிகளவு டேட்டா வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.