ஜியோ நாடு முழுக்க சுமார் 98.8% பகுதியில் 4ஜி கனெக்டிவிட்டி வழங்கி முதலிடம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் 90.0% மற்றும் வோடபோன், ஐடியா நிறுவனங்கள் முறையே 84.6% மற்றும் 82.8% கனெக்டிவிட்டி வழங்குகின்றன.
4ஜி நெட்வொர்க் கனெக்டிவிட்டிக்கும், இணைய வேகத்திற்கு அதிக வேறுபாடுகல் உள்ளன. அதன்படி நாட்டின் அதிவேக மொபைல் டேட்டா வழங்கிய நிறுவனமாக ஏர்டெல் உள்ளது. இரண்டு, மூன்று மற்றும் நான்காவது இடங்களை முறையே வோடபோன், ஐடியா மற்றும் ஜியோ நிறுவனக்கள் பிடித்துள்ளன.