30 ஜிபி இலவச டேட்டா; ஏர்டெல் ஹோலி ஆஃபர்

செவ்வாய், 14 மார்ச் 2017 (14:02 IST)
ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது 30 ஜிபி இலவச டேட்டாவை ஹோலி பண்டிகையின் சிறப்பு சலுகையாக வழங்கியுள்ளது.


 

 
ஜியோ தனது இலவச சேவையை முடிவு செய்துகொண்டு கட்டண சேவையை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. ஜியோவை சமாளிக்க ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் மாதம் 28 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் குரல் சேவை என ஏராளமான சலுகைகளை அண்மையில் அறிவித்தனர்.
 
ஜியோவின் ப்ரைம் திட்டத்திற்கு போட்டியாக ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தற்போது தனது போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஹோலி பண்டிகையை முன்னிட்டு அதிரடியாக சிறப்பு சலுகையை வழங்கியுள்ளது.
 
My Airtel ஆப் செயலியில் ஏர்டெல் சர்ப்ரைஸ் என்ற பெயரில் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. இதை க்ளிக் செய்தால் மாதம் 10 ஜிபி என 3 மாதத்திற்கு 30ஜிபி டேட்டா இலவசமாக பெறலாம். 
 
ஆனால் இந்த சலுகை 10 ஜிபி என செயலியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலருக்கு இந்த 10 ஜிபி ரூ.100க்கு வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். ஏர்டெல்-யின் இந்த அதிரடி சலுகை வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்