ஹரியானாவில் 67 லட்சம் டன் கோதுமை கொள்முதல்

திங்கள், 11 மே 2009 (15:32 IST)
ஹரியானா மாநிலத்தில் 67 லட்சத்து 63 ஆயிரம் டன் கோதுமை கொள்முதல் செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது இது சென்ற வருடத்தைவிட சுமார் 15 லட்சம் டன் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற வருடம் 52 லட்சத்து 36 ஆயிரம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.

இது குறித்து ஹரியானா உணவு வாணிக கழக அதிகாரி கூறுகையில், சென்ற வியாழக்கிழமை வரை விவசாயிகளிடம் இருந்து, கொள்முதல் நிலையங்களில் 67.63 லட்சம் டன் கோதுமை வாங்கப்பட்டுள்ளது.

வியாபாரிகள் 2619 டன் கோதுமை கொள்முதல் செய்துள்ளனர். இதில் ஜிந்த் மாவட்டத்தில் இருந்து அதிகளவு வியாபாரிகள் கொள்முதல் செய்துள்ளனர். இந்த மாவட்டத்தில் 877 டன் வாங்கியுள்ளனர்.

அரசகொள்முதல் செய்தததில் சிர்சா மாவட்டத்தில் அதிகமாக 9.1 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கர்னால் மாவட்டத்தில் 7.17 லட்சம் டன், பதிகாபாத் மாவட்டத்தில் 7.10 லட்சம் டன், ஜிந்த் மாவட்த்தில் 6.81 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டது.

இதில் ஹரியான மாநில உணவு கழகம் 14.70 லட்சம் டன், ஹபீட் 24.22 லட்சம் டன், இந்திய உணவு கழகம் 9.18 லட்சம் டன், அக்ரோ இன்டஸ்டீரிஸ் கார்ப்பரேஷன் 6.79 லட்சம் டன், ஹரியானா வேர்ஹவுஸிங் கார்ப்பரேஷன் 6.56 லட்சம் டன், கன்பீட் 6.13 லட்சம் டன் கொள்முதல் செய்துள்ளன.

இதற்கு முன் ஹரியானாவில் அதிகபட்சமாக 2001 ஆம் ஆண்டில் 64 லட்சத்து 11 ஆயிரம் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது.


வெப்துனியாவைப் படிக்கவும்