விவசாயிகளுக்கு நேரடியாக உர மானியம்

விவசாயிகளுக்கு உர மானியம் நேரடியாக வழங்கும் மத்திய அரசினதிட்டம், தென்மாநிலங்களில் மதுரையிலும், வட மாநிலங்களில் ஒரு மாவட்டத்திலுமமுன்னோட்டமாக விரைவில் செயல்படுத்தப்படும் என, மத்திய ரசாயனம் மற்றுமஉரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்தார்.

தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் நலவாரியம் மூலம், மதுரை மாவட்ட ஆட்சியரஅலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் 968 பயனாளிகளுக்கு ரூ.35,13,600 மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார்.

அப்போது அமைச்சர் அழகிரி பேசும் போது, தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் விவசாயிகள் சமூகப் பாதுகாப்புததிட்டத்தின்கீழ் 2006-ம் ஆண்டு முதல் 30.6.2009 வரை உறுப்பினர்கள் திருமணம், உறுப்பினரின் மகன் அல்லது மகள் திருமண உதவி, முதியோர் ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து, மகப்பேறு உதவி, கல்வி உதவி என மொத்தம் 4,08,339 பயனாளிகளுக்கு ரூ.299.21 கோடியில் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தோருக்கரூ.83.56 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு நேரடியாக உர மானியம் வழங்கும் திட்டம் குறித்து மத்திநிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். அதுதொடர்பாக நடவடிக்கமேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு முன்னோட்டமாக எனது தொகுதியில் மதுரை மாவட்டமும், வட மாநிலத்தில் ஒரு மாவட்டத்திலும் இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த அனைத்தநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்