வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்யும் சிசிஐ

செவ்வாய், 11 மார்ச் 2014 (14:43 IST)
‘வாட்ஸ்அப்’ மென்பொருள் செயல்பாட்டை ஆய்வு செய்ய Competition Commission of India (CCI) முடிவு செய்துள்ளது. சமூக வலைத்தளங்கள் செயல்பட் சிசிஐ ஒப்புதல் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
FILE

‘வாட்ஸ்அப்’ மென்பொருள் தொழில்நுட்பத்தின் மூலம் உலகின் எந்த மூலையில் உள்ளவர்களும் யாரிடம் வேண்டுமானாலும் தாங்கள் கையிலுள்ள ஸ்மார்ட்போன் மூலம் குறுஞ்செய்திகள் மற்றும் படங்களை அனுப்பி தொடர்பு வைத்துக் கொள்ள முடியும்.

இந்த வாட்ஸ்அப்பை சமூக வலைதளமான பேஸ்புக் 1.16 லட்சம் கோடிக்கு கடந்த மாதம் வாங்கியது. இந்த சமூக வலைதளங்களுக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்தியாவில் மட்டும் சுமார் 9.30 கோடி பேர் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். சுமார் 4 கோடி பேர் வாட்ஸ்அப் சேவையை பெறுகின்றனர். இந்நிலையில், இந்த இரு சமூக வலைதளங்களும் இணைந்துள்ள நிலையில், இவற்றின் செயல்பாட்டினால், தனிநபரின் பாதுகாப்பு அம்சங்கள் எந்த அளவிற்கு இடையூறு இல்லாமல் இருக்கும் என்று பல்வேறு தரப்புகளிலிருந்து கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக, இந்திய வர்த்தக போட்டி உறுதி ஆணையமான ‘காம்பட்டீஷன் கமிஷன் ஆப் இந்தியா’ (சிசிஐ)வை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தற்போது இணைந்துள்ள இந்த சமூக வலைதள நிறுவனங்கள் முதலில் சிசிஐயிடம் ஒப்புதல் பெற வேண்டும். இது தொடர்பான விண்ணப்பம் சிசிஐயிடம் வரும். அப்போது சமூக வலைதள நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும்’ என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்