எஸ்பிஐ லோன்களின் வட்டி குறைப்பு!

வெள்ளி, 1 பிப்ரவரி 2013 (11:40 IST)
FILE
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா குறைந்தபட்ச கடன் வட்டியை 9.75 சதவீதத்திலிருந்து 9.70 சதவீதமாக குறைத்துள்ளது.

வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி(ரெப்போ), ரொக்க இருப்பு(சிஆர்ஆர்) ஆகியவற்றை தலா 0.25 சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனால், வங்கிகளுக்கு கூடுதல் நிதி கிடைக்கிறது. இதையடுத்து, வங்கிகளும் வீடு மற்றும் வாகனக் கடன்களை குறைக்கத் தொடங்கியுள்ளன.

ஸ்டேட் பேங்க் தனது குறைந்தபட்ச கடன் வட்டியை 9.75 சதவீதத்தில் இருந்து 9.70 சதவீதமாக குறைத்துள்ளது. இதன் மூலம், வீடு மற்றும் வாகனக் கடன்களின் வட்டி குறையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்