உணவு, எரிபொருள் பணவீக்கத்தில் மாற்றமில்லை

வியாழன், 5 மே 2011 (14:21 IST)
உணவுப் பொருட்கள், எரிபொருட்கள் ஆகியவற்றின் விலைகளில் பெரிய மாற்றமேதும் இல்லாத காரணத்தினால், இவற்றிற்கான பணவீக்கம் ஏப்ரல் 23ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.

மத்திய அரசு இன்று வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, ஏப்ரல் 16ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 8.76 விழுக்காடாக இருந்து உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம், அடுத்த ஒரு வார காலத்தில் 8.53 விழுக்காடாக குறைந்துள்ளது.

எரிபொருள் பணவீக்கம் 13.53 விழுக்காடாகவே நீடிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்