இந்திய கைப் பைகளுக்கு ஹாலிவுட்டில் மதிப்பு

புதன், 3 நவம்பர் 2010 (16:20 IST)
FILE
இந்தியாவில் தயாரிக்கப்படும் அதிக விலையுள்ள தோல் கைப் பைகளை ஹாலிவுட் நட்சத்திரங்கள் விரும்பி வாங்கி பயன்படுதுகிறார்கள்.

.நவ நாகரிக பெண்களும், ஹாலிவுட் நட்சத்திரங்களும் பயன்படுத்தும் கைப் பைகள் மிக கவர்ச்சிகரமானவை என்பது மட்டுமின்றி, அவைகள் மிக விலையுயர்ந்தவையும் கூட. இப்படிப்பட்ட விலையுயர்ந்த கைப் பைகளை விற்கும் மிகப் பெரிய நிறுவனங்களான ஹெர்ம்ஸ், சானல் ஆகியன இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தோல் கைப் பைகளை வாங்கி தங்களுடைய பெருமைக்குரிய விற்பனைக் காட்சி அரங்குகளில் வைக்கத் தொடங்கியுள்ளன.

மேட் இன் இந்தியா என்பது இன்றைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்து தயாரிப்பாகியுள்ளது என்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் வெண்டாம் லக்சூரி கண்காட்சியில் பங்கேற்றுள்ள நாகரிக அணிகலன்களுக்கான உபரிகளை வடிவமைத்துத் தரும் மீரா மஹாதேவி கூறியுள்ளார்.

ஹாலிவுட் நட்சத்திரங்களான ஜூலியா ராபர்ட்ஸ், சியன்னா மில்லர் ஆகியோர் இந்திய தயாரிப்பு கைப் பைகளையே வாங்கி பயன்படுத்துவதோடு, அதனை தாங்கள் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளிலும் பெருமையுடன் கொண்டு வருகின்றனர் என்று பிடிஐ செய்தியாளர் கிருபா கிருஷ்ணன் தெரிவிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்