இந்தியா-கனடா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: மன்மோகன், ஹார்ப்பர் சந்திப்பில் முடிவு

வெள்ளி, 12 நவம்பர் 2010 (12:36 IST)
இந்தியாவும் கனடா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான பேச்சுவார்த்தையை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பரும் தொடங்கியுள்ளனர்.

தென் கொரியத் தலைநகர் கொரியாவில் நடைபெற்றுவரும் ஜி20 மாநாட்டிற்கிடையே சந்தித்துப் பேசிய இரு நாட்டின் பிரதமர்களும், இரு நாடுகளுக்கு இடையிலே கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துவரும் வர்த்தகத்தை அடிப்படையாக்க் கொண்டு, அதனை மேம்படுத்திக் கொள்ளும் பொருட்டு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்வதென முடிவு செய்துள்ளனர்.

இந்தியா-கனடா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்யப்படுவது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முன்னேற்றம் என்று கூறியுள்ள கனடா பிரதமர் ஹார்ப்பர், இரு நாடுகளின் வர்த்தக சமூகத்திற்கு இது பெரும் பயனளிக்கும் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்