இனி ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வருமானம் இருந்தால் மட்டுமே கார் லோன் -எஸ்.பி.ஐ

திங்கள், 2 செப்டம்பர் 2013 (15:00 IST)
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) அதன் கார் கடன்களுக்கான தகுதி முறையை நிர்ணயித்துள்ளது. இனிமேல் வருடத்திற்கு ரூ.6 லட்சம் சம்பாதித்தால் மட்டுமே கார் கடன்களை வழங்க முடிவு செய்துள்ளது.
FILE

எஸ்.பி.ஐ வங்கி, பணவீக்கம் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கோள்ளப்பட்டது. ஆனால், பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதால் எஸ்.பி.ஐ வங்கி எச்சரிக்கையாக இந்த புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

'பெட்ரோல், பராமரிப்பு, காப்பீடு மற்றும் பிற செலவுகளின் செலவை பார்க்கும்போது, நாம் குடும்ப வருமானம் ரூ.50,000 இருந்தால் மட்டுமே கார் வாங்க திட்டமிட வேண்டும்' என்று வங்கி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். வங்கி வாகனத்தின் செலவாக 0.51% பதப்படுத்தும் கட்டணமாக வசூலிக்க தொடங்கியுள்ளது.

வங்கியாளர்கள் தகுதி விதிமுறைகளை கடுமையாக்கி பொருளாதாரத்தின் சரிவு காலத்தில் ஒரு தரமான செயல்படும் நடைமுறை ஆகும் என்று கூறியுள்ளனர். இளைஞர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும் காலங்களில் வங்கிகளின் காரணியாகும். ஆனால் வேலைகள் வளர்ச்சி இல்லாமல் சரிவு ஏற்படும் காலத்தில், சம்பள உயர்வு என்பது இல்லை' என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்