என்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் டெக்னீசியன் டிரெய்னி

வெள்ளி, 14 பிப்ரவரி 2014 (15:46 IST)
நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி (என்.ஐ.டி). கல்வி நிறுவனத்தில் ஐ.டி.ஐ முடித்தவர்களுக்கு டெக்னீசியன் டிரெய்னிக்கான காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
FILE

பணி: டெக்னீசியன் டிரெய்னி

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 26 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: மெஷினிஸ்ட், டர்னர், கார்பென்டர், எலக்ட்ரீசியன், மோல்டர் மற்றும் பிட்டர் போன்ற ஏதாவதொரு பிரிவுகளில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும். முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

உதவித்தொகை: மாதம் ரூ.6,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Head of the Department ,

Production Engineering Department,

National Institute of Technology,

Tiruchirappalli - 620 015

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.02.2014

இது பற்றிய முழுமையான விவரங்கள் அறிய www.nitt.edu/home என்ற வலைத்தளத்தைப் பார்க்கவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்