விருப்ப ஓய்வு பணி உரிமையல்ல: உச்ச நீதிமன்றம்

வியாழன், 24 செப்டம்பர் 2009 (20:56 IST)
FILE
விருப்ப ஓய்வு பெறுவது பணியோடசேர்ந்த உரிமை அல்ல என்று சட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது.

விருப்ப ஓய்வு (Voluntary Retirement) என்பது ஒரு நிறுவனம் வகுக்கும் திட்டத்திற்கு உட்பட்டதுதான் என்றும், விருப்ப ஓய்வு பெற பணியாளர் விரும்பினால் அதனை நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று அத்தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான நிலைய மேலாளராக பணியாற்றிய பதுபித்ரி தாமோதர் ஷெனாய் என்பவர், தான் அளித்த விருப்ப ஓய்வை இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏற்காததை எதிர்த்து செய்த மேல் முறையீட்டை விசாரித்து உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தருண் சாட்டர்ஜி, ஆர்.எம். லோஹியா ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு, பணியாளர் தெரிவிக்கும் விருப்ப ஓய்வு என்பது நிர்வாகத்தின் ஒப்புதலிற்கு உட்பட்டதே என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்