தேர்தல் கிசு கிசு

செவ்வாய், 10 மார்ச் 2009 (15:59 IST)
எந்தப் பக்கம் போவது?

அதிக தொகுதி கேட்கவே கூட்டணி முடிவை மாம்பழக் கட்சி ஜவ்வாக இழுத்து வருவதாகக் கூறப்பட்டது. ஆனால் விஷயம் அதுவல்லவாம். அம்மா பக்கம் போக தந்தை விரும்பினாலும், மகன் முட்டுக்கட்டை போடுகிறாராம். காங்கிரஸ் இருக்கும் அணியில் தான் இருக்க வேண்டும் என்று மகன் 'அன்புத்' தொல்லை கொடுத்து வருகிறாராம்.

என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறாராம் தந்தை!

***

கலக்கத்தில் கழக‌ம்!

திடீரென இலங்கை விவகாரத்தை எதிர் முகாம் கையில் எடுத்திருப்பது அறிவாலயத்தை கவலையடையச் செய்துள்ளதாம். தேர்தல் நேரம் பார்த்து அம்மா நோன்பிருந்ததும் அதற்கு ஊடகங்கள் அளித்த முக்கியத்துவமும் தேர்தலில் எதிரொலிக்கும் என்று உடன்பிறப்புக்களே ஒப்புக் கொள்கிறார்களாம்.

***

ஈரோடு யாருக்கு?

புது வரவான ஈரோடு தொகுதியில் நிற்க வேண்டும் என்பதில் பெரியாரின் பேரனான மத்திய அமைச்சர் உறுதியோடு இருக்கிறாராம். அவருக்குப் போட்டியாக கழகம் சார்பில், அதே மாவட்டத்தின் பெண் அமைச்சரும் களத்தில் குதிப்பதாக இருந்தது. ஆனால் கட்சிக்குள்ளேயே அவருக்கு போதிய ஆதரவு இல்லதாதால், தனது முடிவை தற்போது மாற்றிக் கொண்டாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்