SSLC உடனடி தேர்வு எழுதியவர்கள் பட்டயப் படிப்பில் சேர்வதில் சிக்கல்

வெள்ளி, 7 ஆகஸ்ட் 2009 (16:48 IST)
10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தோல்வியடைந்து, பின்னர் உடனடித் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்கள் பட்டயப் படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு பாலிடெக்னிக்கில் கடந்த மாதம் 15ஆம் தேதியுடன் மாணவர் சேர்க்கை முடிவடைந்து விட்டது. இதன் காரணமாக 10ஆம் வகுப்பு உடனடித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பட்டயப்படிப்பில் சேர முடியாமல் தவித்து வருகின்றனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு எழுதி வெற்றி பெற்றால் அவர், பொறியியல் படிப்புகளில் சேர துணைக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

அதுபோல் 10ஆம் வகுப்பு உடனடித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களும் பட்டயப் படிப்பில் சேர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்