+2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது

செவ்வாய், 31 மார்ச் 2009 (16:35 IST)
ப‌னிரெ‌ண்டா‌ம் வகு‌ப்பு பொது‌த் தே‌ர்வு ‌விடை‌த்தா‌ள் திருத்தும்பணி நேற்று தொடங்கியது. 10 நாட்களில் அனை‌த்து ‌விடை‌த்தா‌ள்களு‌ம் திருத்தி முடிக்க ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வை 7 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும்பணி சென்னையில் 3 பள்ளிகளில் நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 43 மையங்களில் நடைபெறுகிறது.

கடந்த ஆ‌ண்டை‌விட முடிந்தவரை விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்ய தேர்வுத்துறை உத்தரவு வழங்கி உள்ளது.

விடைத்தாள் திருத்தும்பணி அந்தந்த மாவட்டங்களில் முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்காணிப்பில், ஏற்பாட்டில் நடக்கிறது. மொத்தம் 56 லட்சம் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளன. விடைத்தாள் திருத்தும் பணி 10 நாட்களில் முடிக்கப்படும் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்