'இக்னோ' படிப்புகளில் சேர அக்டோபர் 31 கடைசி நா‌ள்!

திங்கள், 20 அக்டோபர் 2008 (12:27 IST)
இந்திராகாந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் (இ‌‌க்னோ) வரும் கல்வியாண்டில் (ஜனவரி 2009) சேருவதற்கு ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்க அக்டோபர் 31ஆ‌ம் தேதி கடைசி நாள் ஆகு‌ம்.

ப‌ட்டய‌ம், இளங்கலை, முதுகலை, முதுகலை ப‌ட்டய‌ம் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர விரும்புபவர்கள், இதற்கான விண்ணப்பங்களை சென்னை மண்டல அலுவலகத்திலும், படிப்பு மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.

ஜனவரி 2009 பருவ எம்.பி.ஏ. மாணவர் சேர்க்கைக்காக, கடந்த ஆகஸ்ட் மாதம் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எம்.பி.ஏ. சேர்க்கைக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை, அதற்கான ஆவணங்களோடு, இக்னோ மண்டல அலுவலகம், சி.ஐ.டி. வளாகம், தரமணி என்ற முகவரிக்கு நவம்பர் 30ஆ‌ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அடு‌த்த ஆ‌ண்டு ‌பி‌‌ப்ரவ‌ரி மாத‌ம் (2009) நடைபெற உள்ள எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வில் பங்குகொள்ள, டிசம்பர் 15ஆ‌ம் தே‌திக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்‌க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்