மத்திய அரசு பள்ளிகள், பல்கலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை: அரசு தகவல்

செவ்வாய், 14 ஜூலை 2009 (15:52 IST)
மத்திய அரசால் நடத்தப்படும் பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களையில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் டி.புரந்தீஸ்வரி, கடந்த மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் 19 மத்திய பல்கலைக்கழகங்களில் 1,812 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கடந்த 2008-09 கல்வியாண்டில் மட்டும் 2,749 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதே காலகட்டத்தில் நவோதயா பள்ளிகளில் காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 3,288 ஆக உள்ளதாகவும் இணை அமைச்சர் புரந்தீஸ்வரி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்