ப‌ள்‌ளிக‌ளி‌ல் ‌சிற‌ப்பு க‌ட்டண‌ம் ர‌த்து

செவ்வாய், 17 பிப்ரவரி 2009 (12:48 IST)
ஆறா‌ம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 50 இலட்சம் மாணவ- மாணவியர் செலுத்தி வந்த சிறப்புக் கட்டணத்தையும், அரசுத் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ- மாணவியர்கள் செலுத்தி வந்த சிறப்புக் கட்டணத்தையும் த‌மிழக அரசு ரத்து செ‌ய்துள்ளத

2009-10ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை தமிழக சட்டப் பேரவையில் இன்று நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர். அ‌தி‌ல் கூ‌ற‌ப்ப‌ட்டிரு‌ப்பதாவது:

கடந்த மூன்று ஆண்டுகளில், பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்கியும், காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியும், தேவைப்படும் இடங்களில் புதிய ஆசிரியர் பணியிடங்களைத் தோற்றுவித்தும், பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தியும், அரசுப் பள்ளிகளில் புகட்டப்படும் கல்வியின் தரத்தை உயர்த்திட அனைத்து முயற்சிகளையும்
இந்த அரசு எடுத்துள்ளது.

வரும் கல்வியாண்டில் 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகளாகவும் நிலை உயர்த்தப்படும்.

நமது மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் செயல்வழிக் கல்விமுறையைப் பல மாநிலங்களும் பின்பற்றத் துவங்கியுள்ளன. அனைவருக்கும் கல்வித் திட்டத்தைத் தமிழகம் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது எ‌ன்று‌ம் கடந்த மூன்றாண்டுகளில் இத்திட்டத்தின் கீ‌ழ் ரூபா‌ய் 2,338 கோடி ஒதுக்கீடு செ‌ய்யப்பட்டுள்ளது.

336 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டு, 1,577 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன. 2001-2002 ஆம் ஆண்டில் 12 சதவீதமாக இருந்த, தொடக்கக் கல்வியில் இடைநிற்போர் விழுக்காடு 2007-2008 ஆம் ஆண்டில் 1.23 சதவீதமாகக் குறைந்துள்ளது.

2001-2002 ஆம் ஆண்டில் 13 சதவீதமாக இருந்த நடுநிலைக் கல்வியில் இடைநிற்போர் விழுக்காடு, 2007-2008 ஆம் ஆண்டில் 1.90 சதவீதமாகக் குறைந்துள்ளது.


இந்த ஆட்சியின் முதல் இரண்டாண்டுகளில் 15,788 வகுப்பறைகள் கட்டப்பட்டு, 2008-2009 ஆம் ஆண்டில் மேலும் 9,085 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இத்திட்டம் வரும் நிதியாண்டில் ரூபா‌ய் 820 கோடி செலவில் செயல்படுத்தப்படும். இதற்கான மாநில அரசின் பங்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ரூபா‌ய் 328 கோடி நிதி ஒதுக்கீடு செ‌ய்யப்பட்டுள்ளது.

உய‌ர்‌நிலை‌ப் ப‌‌ள்‌ளிகளை மே‌ம்படு‌த்த ரூ.200 கோடி ஒது‌க்‌கீடு

மத்திய அரசின் புதிய திட்டமான தேசிய இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீ‌ழ், வரும் நிதியாண்டில் ரூபா‌ய் 800 கோடி மதிப்பீட்டில் மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கான மாநில அரசின் பங்காக ரூபா‌ய் 200 கோடி ஒதுக்கீடு செ‌ய்யப்பட்டுள்ளது.

அண்மையில் தேசிய அளவில் நடத்தப்பட்டுள்ள ஆ‌ய்வில் மொழி, கணக்கு மற்றும் வாசித்துப் புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றில் நமது மாநிலப் பள்ளிக் குழந்தைகள் இந்தியாவிலேயே சிறந்து விளங்குவதாக வந்துள்ள செ‌ய்தி மனநிறைவு அளிக்கிறது.

மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகளை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது.

2007-2008 ஆம் ஆண்டு முதல், ஊரக வளர்ச்சித் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளின் கட்டடங்களைப் பழுதுபார்த்துச் சீரமைக்கும் திட்டத்தின் கீ‌ழ் இதுவரை 14,546 பள்ளிகளில் ரூபா‌ய் 188 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டிலும், ரூபா‌ய் 85 கோடி மதிப்பீட்டில் மேலும் 5,000 பள்ளிகளில் இப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் 421 அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளுக்குக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. வரும் நிதியாண்டில் இப்பணிகளுக்காக ரூபா‌ய் 250 கோடி ஒதுக்கீடு செ‌ய்யப்பட்டுள்ளது.

2,500 நடு‌நிலை‌ப் ப‌ள்‌‌ளிகளு‌க்கு க‌ணி‌‌னி வழ‌ங்க ரூ.50 கோடி ஒது‌க்‌கீடு

கடந்த 3 ஆண்டுகளில் நமது மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கும் மேனிலைப் பள்ளிகளுக்கும் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமன்றி, அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீ‌ழ் இயங்கும் அனைத்து நடுநிலைப் பள்ளிகளுக்கும் 3 ஆண்டு காலத்தில் கணினிகள் வழங்கும் திட்டத்தின் கீ‌ழ் சென்ற வரவு-செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டவாறு 2,200 பள்ளிகளுக்கு கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில் மேலும் 2,500 நடுநிலைப் பள்ளிகளுக்குக் கணினிகள் வழங்க ரூபா‌ய் 50 கோடி நிதி ஒதுக்கீடு செ‌ய்யப்பட்டுள்ளது.

தமி‌ழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமி‌ழ் வழியில் பயிலும் சுமார் 11 இலட்சம் மாணவ- மாணவியர்க்கு 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டணத்தையும், 6ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 50 இலட்சம் மாணவ மாணவியர் செலுத்தி வந்த சிறப்புக் கட்டணத்தையும், அரசுத் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ- மாணவியர்கள் செலுத்தி வந்த சிறப்புக் கட்டணத்தையும் இந்த அரசு ரத்து செ‌ய்துள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் முழுமையான இலவசக் கல்வி அளிக்கப்படுவது உறுதி செ‌ய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவியர்களுக்குக் கண்பார்வைப் பரிசோதனை செ‌ய்து, பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்குவதற்கான புதிய திட்டம், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் மூலம், ரூபா‌ய் 5 கோடி மதிப்பீட்டில் வரும் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்படும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டத்திற்காக ரூபா‌ய் 58 கோடியும், இலவசப் பாடநூல் வழங்கும் திட்டத்திற்காக ரூபா‌ய் 70 கோடியும் வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செ‌ய்யப்பட்டுள்ளது.

இலவச சை‌க்‌கி‌ள் ‌தி‌ட்ட‌த்து‌க்கு ரூ.112 கோடி ஒது‌க்‌கீடு

மாணவர்களுக்கு இலவச மற்றும் சலுகைக் கட்டணத்தில் பேருந்துப் பயணச் சீட்டு வழங்குவதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு மானிய உதவியாக ரூபா‌ய் 300 கோடியும், பதினொன்றாம் வகுப்பில் பயிலும் மாணவ- மாணவியருக்கு இலவச மிதி வண்டி வழங்கும் திட்டத்திற்கு ரூபா‌ய் 112 கோடியும் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செ‌ய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக, 2005-2006 ஆம் ஆண்டில் ரூபா‌ய் 4,110 கோடியாக இருந்த பள்ளிக் கல்வித் துறைக்கான ஒதுக்கீடு, 2009-2010 ஆம் ஆண்டில் ரூபா‌ய் 9,147 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்கள் மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு அனைத்து நூல்களையும் படிக்கும் வா‌ய்ப்பை அளிக்கும் நோக்கத்தோடு,

சென்னையில் சர்வதேசத் தரத்திலான நவீன மாநில நூலகம் ஒன்று அமைக்கப்படும் என இந்த அரசு அறிவித்திருந்தது. ரூபா‌ய் 166 கோடி மதிப்பீட்டிலான இந்நூலகத்திற்கு 16.8.2008 அன்று முதலமைச்சர் கருணா‌நி‌தியா‌ல் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் 2010 மே திங்களில் நிறைவுறும் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்