பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவக்கம்

செவ்வாய், 29 செப்டம்பர் 2009 (17:12 IST)
பி.எட்., படிப்புக்கான கலந்தாய்வு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இன்று துவங்கியது. அக்டோபர் 6ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் இந்தக் கலந்தாய்வு மூலம் மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர். இன்றைய கலந்தாய்வில் சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், ஹோம் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

நாளை (30ஆம் தேதி) கணிதப் பாடத்திற்கும், செப்டம்பர் 31 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் இயற்பியல், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

அக்டோபர் 3ஆம் தேதி வேதியியல், தமிழ், வணிகவியல் பாடங்களுக்கும், அக்டோபர் 5ஆம் தேதி தாவரவியல் மற்றும் விலங்கிய பாடங்களுக்கும், 6ஆம் தேதி ஆங்கிலப் பாடத்திற்கும் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலை tndce.in/bed%5Fadmission%5F2009/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்