பிரிட்டிஷ் கவுன்சிலின் புதிய பயிற்சி மையம்: அமைச்சர் தென்னரசு துவக்கி வைக்கிறார்

சனி, 7 நவம்பர் 2009 (17:29 IST)
பிரிட்டிஷ் கவுன்சில் மத்திய சென்னையில் அமைத்துள்ள புதிய ஆங்கில மொழி பயிற்சி மையத்தை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வரும் 12ஆம் தேதி துவக்கி வைக்கிறார்.

அன்று மதியம் 3 மணியளவில் நடக்கும் துவக்க விழாவில் பிரிட்டிஷ் கவுன்சில் (இங்கிலாந்து) துணை இயக்குனர் (செயல்பாடு) ராப் லைனஸ், இந்திய பிரிட்டிஷ் கவுன்சிலின் கலாசார அமைச்சர் ருத் கீ ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

மத்திய சென்னையில் புதிதாக துவக்கப்பட உள்ள மையத்தில் 1,600 பேர் பயிலும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலப் புலமையில் சிறந்து விளங்கும் 12 இந்திய ஆசிரியர்கள் மற்றும் 2 கல்வித்துறை மேலாளர்கள் புதிய மையத்திற்காக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த மையத்தில் உள்ள வகுப்பறைகள் அனைத்திற்கும் ஏ.சி. வசதி செய்யப்பட்டுள்ளதுடன், இணையதள சேவை மற்றும் ஆடியோ-விஷுவல் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கவுன்சில் நடத்தும் ஆங்கிலப் புலமை பெறுவதற்கான வகுப்பில் சேர 044-4205 0600 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்