சிறைக் கைதிக‌ளுக்கு இலவசமாக பட்டப்படிப்பு: இக்னோ பல்கலை. முடிவு

செவ்வாய், 8 டிசம்பர் 2009 (15:34 IST)
நாடு முழுவதும் உள்ள ‌கைதிகள், தாங்கள் விரும்பும் இளங்கலை, முதுநிலை பட்டப்படிப்புகளை இலவசமாக படிக்க ஏதுவாக, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (IGNOU) கல்விக்கட்டணம் முழுவதையு‌ம் ரத்து செய்து‌ள்ளது.

மத்திய அரசு பல்கலைக்கழகமான இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் ‌சிறைக் கைதிகளுக்கு இலவச கல்வி வழங்க முன்வந்துள்ளது. இதனால், நாடு முழுவதும் உள்ள சிறைக் கைதிகள் இக்னோ பல்கலைக்கழகத்தில் அனைத்து படிப்புகளையும் இலவச படிக்கலாம்.

கைதிகளுக்கான இலவச கல்வித்திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள மத்திய ‌சிறைகளில் கல்வி மையங்களை தொடங்கவும் இக்னோ திட்டமிட்டுள்ளதாக அதன் சென்னை மண்டல இயக்குனர் கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்