இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் அன்னாசிபழம் !!

அன்னாசிபழத்தில் புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் அதிக அளவில் நிறைந்துள்ளது. வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது. 

அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும். மேலும் இதில் உள்ள தையாமின் மற்றும் வைட்டமின் பி சத்து, உடலில் உள்ள சுரப்பிகளின் செயல்பாட்டை சீராக்குகிறது. இதனால் உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது.
 
அன்னாசி பழத்தில் அதிக அளவில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் உங்கள் எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கின்றது.
 
அன்னாசி பழத்தில் நிறைய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கின்றது. மேலும் உங்களின் ஜீரண மண்டலத்தினை வலுப்படுத்துகிறது.
 
அன்னாசி பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உங்கள் உடல் எடையினை குறைக்க உதவுகின்றது. மேலும் உங்கள் இருதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
 
உயர் இரத்த அழுத்தத்தினை குறைப்பதற்கு அன்னாசிபழம் பெரிதும் பயன்படுகிறது. அன்னாசிபழதில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைத்திருக்க பயன்படுகிறது.
 
அன்னாசி பழத்தில் அதிக அளவில் வைட்டமின் எ சத்துக்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் எ உங்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது. மேலும் பார்வை கோளாறு, மாலை கண் நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க அன்னாசிபழம் பயன்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்