அந்த அளவுக்கு கண்ணைக் கவரும் தீபாவளி புது வரவுகள் சென்னை தியாகராயா நகரில் உள்ள துணிக் கடைகளில் குவிந்துள்ளன. ஆண், பெண், குழந்தைகள், சிறுமி, சிறுவர்கள் என அனைத்து தரப்பினரையும் தங்கள் பக்கம் இழுத்து நிறுத்துகின்றன.
போத்தீஸ், சென்னை சில்க்ஸ், குமரன், நல்லி என்று பிரம்மாண்டமான பல அடுக்கு மாடிகளைக் கொண்ட இங்குள்ள துணிக்கடைகளில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். இங்கு தீபாவளி ஸ்பெஷல் என்று ஒவ்வொரு மாடியிலும் நாம் விரும்பும் வித்தியாசமான வடிவமைப்புகளில் துணிகளும், ஆயத்த ஆடைகளும் குவிந்து கிடக்கின்றன.
பிராண்டர்டு சர்ட் 350 முதல் 1000 வரை பிராண்டர்டு பேண்ட் 800 முதல் 1400 வரை
காப்பிடிரஸ் சர்ட் 600 முதல் 900 வரை
போக்கி குர்தா 400 முதல் 1000 வரை
அரோ சர்ட் 700 முதல் 1000 வரை
சர்வாரி சர்ட் 400 முதல் 500 வரை
டர்டெல் 600 முதல் 800 வரை
கார்கோ பேன்ட் 500 முதல் 900 வரை
இன்டியன் டோரன் 1000 முதல் 2500 வரை உள்ளன.
பெண்களையும், குழந்தைகளையும் மகிழ்வித்திட குடும்பத் தலைவர்களுக்கு ஓர் நல்வாய்ப்பை இந்த தீபாவளி தருகிறது. பணத்திற்கு எங்கே போவது என்பது போன்ற அர்த்தமற்ற கேள்விகள் கேட்கும் காலமெல்லாம் மலையேறிவிட்டது. தேய் தேய் என்று கிரடிட், டெபிட் கார்டுகளை தேய்த்து கொண்டாடுங்கள் தீபாவளியை.