ரவா லட்டு

Webdunia

செவ்வாய், 6 நவம்பர் 2007 (14:30 IST)
தேவையான பொருட்கள் :

webdunia photoWD
வறுத்த ரவை - 100 கிராம்
பொடி செய்த சக்கரை - 200 கிராம்
(மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.)
நெய் - 50 கிராம்
பால் - 50 மில்லி
முந்திரி, திராட்சை - தேவையான அளவு

செய்முறை :

வறுத்த ரவையுடன், நெய்யில் பொரித்த முந்திரி, திராட்சையை போடவும். பொடி செய்த சக்கரையை வறுத்த ரவையுடன் சேர்க்கவும்.

இந்த கலவையில் சூடான பாலை விடவும். பொறுக்கும் சூட்டில் அதை உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். சுவையான ரவா லட்டு தயார்.