மைதா முறுக்கு

Webdunia

செவ்வாய், 6 நவம்பர் 2007 (14:32 IST)
தேவையான பொருட்கள் :

மைதா மாவு - 2 கப்
துருவிய தேங்காய் - 2 கப்
அரிசி மாவு - 2 கப்
வெள்ளை எள் - 2 டீஸ்பூன்
ரவை - 2 கப்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 2 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

webdunia photoWD
மைதா, ரவை இரண்டையும் கலந்து மெல்லிய வெள்ளைத் துணியில் கட்டி குக்கரில் 5 நிமிடம் ஆவியில் வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.

ஆறிய பின் சல்லடையில் சலித்து எடுத்துக் கொண்டு மற்ற சாமான்கள் எல்லாவற்றையும் சேர்த்து வெது வெதுப்பான தண்ணீரில் முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

பின் சிறு நெல்லிக்காயளவு மாவை எடுத்து நீளமாக உருட்டி மோதிரம் போல் சுருட்டி வைத்துக் கொண்டு எண்ணெயில் மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.